இனி -இவன் காதல்தொடர்கதை-(04)

எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்தாள் ....
இழப்புக்களும் அதிகமாக இருக்கும் ..

இந்த காதல் கதை நான்கு கோணக்கதை ..!!!

காதல் அத்தியாயம் 04

பாடசாலையின் முதல் பாடவேளையும் முடிந்தது
நாங்கள் எல்லோரும் எதிர்பாத்த அந்த புதிய மாணவியை காணவில்லை .

ஒருவன் ஒற்றன் வேலை பார்ப்பதுபோல் அதிபரின் அலுவலகம் வரைபோவதும் ..இன்னும்வரேலயடா மச்சான்என்றசெய்தியைசெய்தியைசொல்வதுமாக நின்றான் அவன் பெயர் விக்கி ....

இதற்குள் எங்க வகுப்பு மாணவிகளுக்கிடையே..
நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடயம் தெரியவர ..ஏன் ..? இப்படி வழியிரியல்..? நாங்க ஒன்னும் பொண்ணுங்களா தெரியலையோ ..?
என்று குத்தல் கதையாக சொல்ல அதை கேட்டும் கேட்காததுபோல் இருந்தோம்..வேறு என்னதான் செய்யமுடியும் ..?

இரண்டாவது பாட வேளையும் முடிந்தது ..அவளைக்காணவில்லை ...!!!
இந்த ஏக்கம் சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கும் ..அவ்வளவுதான் ..!!!

அப்போது விக்கி சொன்னான் " மச்சான் வந்துட்டாளடா ...!!!
இவர்கள் ஆரவாரப்படுமளவுக்கு இனி- இவன் இல்லை ..!!! அதுதான் உண்மை ..!!!

சுமார் பாடசாலை விடும் நேரம் அளவில் வகுப்புக்குள் வந்தாள் புதிய மாணவி ...எல்லா பெண் மாணவிகளும் அவளை சூழ்ந்து புதினம் விசாரித்தனர் ...
ஒரு ஆண் மாணவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அவளுடன் பேசுவதற்கு ...
அன்றைய பாடசாலை நாளும் நிறைவு பெற்றது .....

தொடரும் .....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (21-May-13, 9:34 pm)
பார்வை : 182

மேலே