புரட்சி நெருப்பின் மிச்சம்

அணைக்கப்பட்ட
பெருநெருப்பின் சிறு குஞ்சொன்றை
காக்கை ஒன்று கடத்திக் கொண்டுபோய்
கூரைக்கடியில் ஒளித்து வைத்து
அதன் அழுகை ஒலியை
ஊதி ஊதி அடக்கப் பார்த்தது .....

ஊதிய காற்றைக் குடித்தே
வேகமாய் வளர்ந்த சிறு குஞ்சு
பெருநெருப்பானது ....

இருப்பு அறிவுப்பு செய்தால்
மெல்ல நீரூற்றிக் கொல்வார்கள்...
காற்றையே துணைக்கழைத்து
கடந்து செல்ல வேண்டும் சில காவல்களை அதுவரை
நீறு பூத்துக் கிடக்க வேண்டும்
அழிக்க நினைத்து நீண்டு
தொடும் விரலைச் சுட்டால் போதும் ..... !

எழுதியவர் : மருத பாண்டியன் (22-May-13, 1:27 pm)
சேர்த்தது : maruthu pandian
பார்வை : 82

மேலே