அந்த ஒரு நொடி...

நேசிக்க தொடங்கிவிட்டேன்
உன்னோடு
பேசிய நாள் முதலாய்...
நிழற்படம் கண்டே
நிஜத்தை அறியாது
நிகழ்காலத்தில் நாம்...
என் மனதும்,வீட்டு வாசலும்
வண்ண கோலத்துடன்
உன் வரவை எதிர்பார்த்து...
மண நாட்களை எண்ணியே
என் நாழிகைகள்
அன்ன நடைபோடுகிறது...
விழிகள் சந்திக்காமலே
சிந்திக்கிறோம்
உதடுகள் உதிர்த்த
வார்த்தைகளால்....
மலரோடு சேர்ந்து மொட்டும்
மணம் பரப்பும்,
காற்றோடு கலந்து
இன்னிசை சேர்க்கும்,
புது யுகமதில் வானெல்லாம்
வானவில் முளைக்கும்- இல்லற
வாழ்வினில் அடியெடுத்து வைக்க
வசந்தங்கள் வாழ்த்து பாடும்
கன்னியிவள் கண்களும்
படபடக்கும்...
நெஞ்சமும் ஓராயிரம் முறை
துடித்தடங்கும்..
பெண்மையும் மயங்கும்
நாணத்தால்,
கொஞ்சம் சிவக்கும்....
பார்வைகள் சங்கமிக்கும்
அந்த ஒரு நொடியில்...
PRIYA