ஆள் இல்லாத விமானம் மூலம் தாக்குதல் அவசியம் - ஒபாமா..! ஜனநாயகத்தை கக்கூசில் வீசி எறியும் அமெரிக்க அரசு.!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்தரங்கில் ஒபாமா அவர்கள் வெள்ளிக்கிழமை இவ்வாறு பேசினார்..!

இன்றைய சூழலில் பயங்கரவாதம் என்பது உலகை அச்சுறுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க அரசை குறிவைத்து பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் தற்காப்புக்காக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் சண்டை புரிவது ஒரு வகை..ஆனால் மறைந்திருந்து தாக்கும் அவர்களை, அவர்கள் பாணியில் தாக்குவது இன்னொரு வகை. இதற்கு ஆளில்லாத விமான தாக்குதல் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் எதிரிகளின் ஆளில்லாத விமான தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே, நாமும் இந்த வழியை பின்பற்றுவதில் தவறில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஆளில்லாத விமான தாக்குதல் என்பது நியாயமான, சட்டப்பூர்வமான ஒன்றுதான் என்றார் ஒபாமா.

கடந்த 2003 - ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் நாட்டில் மட்டும் 3,336 பேர் கொல்லப்பட்டுள்ளனர் பாகிஸ்தான் நாட்டில் மட்டும் என்று நவாஸ் செரிப் பதவி ஏற்றவுடன் கூறியிருக்கிறார்.

மேலும் ஒபாமா கூறும் பொழுது, பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும் என்பது நம் நோக்கமல்ல. முதலில் அவர்களை கைது செய்ய வேண்டும், பிறகு விசாரணை நடத்த வேண்டும், அதன் பிறகு அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்று தர வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் நிலைப்பாடு. ஆனால் அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுவதற்கு முன்பு பயங்கரவாதிகள்

நம்மை தாக்குகிறார்கள், அதனால் தற்காப்புக்காக நாமும் பதிலடி தர வேண்டியது அவசியம்.

தாக்குதல் பாணி என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது. போர் என்றால் போர் தான். அதில் சமரசம் கிடையாது. அதனால் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஆளில்லாத விமான தாக்குதல் அவசியமான ஒன்று என்றார்.

எப்படி இருக்கிறது கதை? அப்படியென்றால் பிரஞ்சு புரட்சி எதற்கு நடந்தது..? கிறுக்குப் பயல்கள் எல்லாம் ஒன்று கூடி நடத்தியவையா அது..? விமானம் மூலம் குண்டு வீசுவார்கள்...
குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் சாகலாம்...அது அவர்களின் விதி..?

முதல் குண்டு வீசியவுடன்...அதாவது ஆளில்லாத விமானம் மூலம் குண்டு வீசியவுடன் அந்த விமானம் சென்று விடும். சரியாக ஏழு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த இடத்தில குண்டு வீசுவார்கள்....இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்றும் பொழுது, அதாவது இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்றுவர்களையும் கொல்வதற்குத் தான் மீண்டும் குண்டு வீச்சு.

இவ்வாறு தான் இலங்கையில் விடுதலைப்புலிகளின் மீதான போரின் போது குண்டு வீசினார்கள்..ஜப்பான், இந்தியா ஜெர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து அமேரிக்கா சீனா என்று, எனவே தான் யுத்தத்தில் காயமே படாத மக்களை பார்க்க முடிகிறது இன்றும் இலங்கையில்..!

அமெரிக்கர்களின் அரசு கில்லட்டின் எந்திரத்தை விட கொடிய தண்டனைக்கு தயாராகி விட்டார்கள் என்று தான் கருத முடிகிறது என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (25-May-13, 8:06 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 96

மேலே