- அன்புள்ள அம்மாவுக்கு -
புனிதமான அன்பு கிடைக்கும் இடம் தாயின் கருவறை ஒன்றே... என்தாய் அவள் தந்த உயிர்பிச்சையில் உயிர்தெழுந்தேனே இன்று... என்தாய் அவளின் அன்புக்கு ஈடுயில்லை உலகில் ஏதும்... என்தாய் அவளின் பாசம் ஒன்றே போதும் என் ஜென்மம் வாழ்ந்து முடிப்பேனே... என்தாய் அவளின் அரவணைப்பு ஒன்றே போதும் வென்று முடிப்பேனே அனைத்தையும்... -: என் தாய் அவள் :- என்னை பத்துமாதம் சுமந்தவள்... என்னை பெற்றெடுத்தவள்... என்னை தாலாட்டியவள்... என்னை வளத்தவள்... எனக்கு வாழ்வு தந்தவள்... என்னை வாழ வைத்தவள்... எனக்காக துடி துடித்தவள்... எனக்காக தவம் கிடந்தவள்... என்தாய் அவள் செல்லதாய்......