............கறை படிந்த நிஜம்..........
எச்சில் இலைகளுக்கு நடுவே கிடக்கிறது,
ஒரு பச்சை குழந்தை !
சாக்கடையில் அமிழ்ந்து மிதக்கிறது,
உடல் உப்பிய மழலை !
வீதியில் எரியப்பட்ட சிசுவின் தேகத்தை,
குதறுகிறது ஒரு வெறிநாய் !
கேட்பாரற்று தெருவில் கிடந்த பிள்ளையுடலை,
ஏறி ஓடி விளையாடுகின்றன பன்றிகள் !
மறைக்கமுடியாதபடி நிகழ்ந்தேறும்,
கொடூரங்கள் இவைகள் நிதமும் இங்கே !
ஆசைக்கும் அவசரத்திற்கும் இச்சை தீர்க்கும் மிருகங்கள்,
ஒளிந்து வாழ்கின்றன நமக்குள்தான் எங்கோ?
அகிம்சை பேசாமல் கண்டுணர்ந்து,
கொன்று களையவேண்டாமோ அவர்களை?
சுமந்த பாசம்கூடவா இல்லாதுபோனது?
அந்த கனத்துப்போன மனங்களுக்கு?
தேவதையாய் தெய்வமாய் போற்றப்படும் பெண்களுக்குள்,
இத்தகைய பேய்களும் பிசாசுகளும்தானா அடக்கம்?
அட அன்னை தெரசா வந்துபோன மண்ணடா இது !!
எவர் மன்னிப்பர் இந்த கொடூரத்தின் உச்சத்தை?
யோசிக்கமாட்டீரா வீசியெறியும் முன்னே?
குழந்தைகள் பேசும் கடவுள்கலல்லவா?
கொன்ற உங்களை விட்டுவைத்திருக்கிறானே அவனும்கூட?
அடங்காது ஆர்ப்பரிக்கும் வெப்பம்,
கொப்பளிக்கும் குருதியோட்டம் சற்றே தகிக்கவைத்து,
அடைக்கிறதே இதயத்தை !
சூடாகிற கபாலம் மரணம்தர யோசிக்கிறது !
அந்த குழந்தைக் கொலையாளிகளுக்கும் !
அதன் காரணமான கயமைக் கொடூரர்களுக்கும் !
எத்தனை இக்கட்டும் அனுபவிக்கலாம்,
இப்படிக் கொடுமைகள்மட்டும் வேண்டாம் இங்கே !
பூமிக்கு வந்ததும் நாதியற்று நாறியிறக்கும் கொடுமை,
தேவைதானா மனிதமே இங்கே ?
இறைவா !!
படைக்காமல் விட்டுவிடேன் இவர்களை !
இல்லை !
நெஞ்சுக்குழி அஞ்சாமல் இதை நிகழ்த்துபவரையேனும் !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
