தமிழ் இந்தியன்!!!

இந்தியன் என்பதில்
பெருமிதம் கொள்வோம்,
அதிலும் தமிழ்
இதயம் கொண்டவர்கள்
என்பதில் பெருமையோடு
பேரானந்தம் கொள்வோம்!!!
எல்லா மொழிகளும்
கற்றுத் தேர்வோம்
அதில் தமிழே
சிறந்ததென எடுத்துரைப்போம்!!!
எல்லா பண்பாடுகளையும்
கண்டு மகிழ்வோம்
அதில் தமிழ்
பண்பாடில் வாழ்ந்து
வரலாறு படைப்போம்!!!
ஒருவனுக்கு ஒருத்தியென
வாழ்வோம் உயிர்கொல்லி
நோய்களை எல்லாம்
ஓட ஓட
விரட்டி அடித்து
கொன்று புதைப்போம்!!!
தமிழன் கலப்பையை
பிடிப்பதில் மட்டுமில்லாது
கணினியையும் திறம்பட
செயல் படுத்துவான்
என நிருபிப்போம்!!!
சித்த வைத்தியமும்
சித்தாந்தமும் நம்
நிலையான தனித்தன்மை
என நிருபிப்போம்!!!
மத நல்லிணக்கம்
போற்றுவோம்,மனிதநேயம்
வளர்ப்போம்,வேற்றுமையை
ஒற்றுமை கொண்டே
போற்றி கொண்டாடுவோம்!!!
அனைவரும் ஒழுக்கத்தோடு
ஒருங்கிணைந்த கல்வி
கற்ப்போம் அறியாமை
இருள்தனை போக்குவோம்!!!
கையூட்டு தவிர்ப்போம்
கடமையை செய்வோம்
தண்டனைகள் பெறாமலே
குற்றங்களை தவிர்ப்போம்!!!
இயற்க்கை வளங்களை
உயிரெனக்ககாத்து இன்னும்
இன்னும் பெருகச்செய்வோம்!!!
தொழில் கல்வி
கற்ப்போம் கற்பிப்போம்
புதியவை இவையென்று
உலகிற்கு அறிமுகப்படுத்துவோம்!!!
விண்ணோக்கி பறக்க
வேண்டுமாயின் வீணான
கனங்களை தவிர்ப்போம்!!!
அதில் தலைக்கணம்
மேதாவித்தனமும் தற்கு்றித்தனம்.
போன்றவைகளை களையென
கொண்டு அறவே தவிர்ப்போம்!!!
சின்னச் சின்ன
அன்பால் அனைவரின்
உள்ளங்களையும் வெல்வோம்!!!
சின்னச் சின்ன
துளிகளாய் சேர்ந்து
பெருவெள்ளம் என
பாய்ந்து தேசத்தை
வளம் பெறச் செய்வோம்!!
நாளைய இந்தியா
உலக வல்லரசு
என்றால் அது
கருவுற்ற தொடக்கம்
நம் தமிழகம் என்றே இருக்கட்டும்!!!
வாழ்க நம் தமிழ்!!!
வளர்க நம் நாடு!!!
வளமோடு நீடூழி வாழ்க
நம் நாட்டு மக்கள்!!!
ஜெய்ஹிந்த்
அன்புடன் நவீன் மென்மையானவன்