என்னை கவிஞனாக்கியது அவளல்ல தமிழ்....!
என்னை கவிஞனாக்கியது அவளல்ல தமிழ்....!
என் அன்னை எனக்கு அறிமுகபடுத்திய தமிழேதான்...!
என் தந்தை எனக்கு பிழையின்றி பேச கற்று கொடுத்த தமிழேதான்...!
என் முதல் வகுப்பு ஆசிரியை எழுத கற்று கொடுத்த தமிழேதான்...!
என் தோல்வியிலும் என் நண்பர்களிடம் ஆறுதலாய் கேட்ட தமிழேதான்...!
என் தடுமாற்றங்களில் எனக்கு நானே பேசிக்கொள்ளும் தமிழேதான்...!
எப்பொழுதோ வந்துபோன அவளல்ல...
எப்பொழுதும் என்னுடன் இருக்கும் தமிழேதான்
என்னை கவிஞனாக்கியது.......