இன்றைய கணினி உலகத்தில்...!

முகபுத்தகத்தை பார்த்து நகைக்கும் நீ
முகம் பார்த்து நகைக்க மறந்துவிட்டாய்
தொலைகாட்சியை ரசிக்கும் நீ அதற்கு
உன் கண்களை தானம் செய்துவிட்டாய்
தேவையில்லா உணவை தேவையென உண்டு
உன் உடலை நீயே அழித்து ஆர்ப்பரிக்கிறாய்
உன் அறிவும் செயல்களும் உன்னைவிட
பிறரை புண்ணாக்குவதை அறிவாயோ?
விழித்துக்கொள் மானிடா நாகரீக நரிக்கு
இரையாகி, நசிந்து மடியாதே ..
--ஹரிகரன்