பாச ஓலை கிழிகிறது ..மனம் விம்மி அழுகிறது

ஓலை கிழிகிறது கண்முன்னே
விபத்தால் ஆன விபரீதம்
விம்மி அழுகிறது உள்ளுக்குள்
விடாப்பிடியாய் என்மனம்

அணைத்திட வருவாரென...
அண்ணாந்து காத்திருக்கும்
பச்சிளங்குழந்தைக்கு - இனி
கிடைக்குமோ..ஓர் பாசமிகு அப்பா

துணிவான துணை வருவாரென
தரிசனதிற்காய் வாயில் நோக்கி
காத்திருந்தவள் அறியவில்லை -தன்
கணவர் ஓலைப்பாயில் வருவாரென்று

இரண்டு மடங்கு சம்பளமாய்
இருநூறு ரூபாய்க்காய் - கண்விழித்து
இருநாளாய் வண்டி ஓட்டி
இன்றோடு மறைந்து போனாய்

இனிய உன்மகள் பள்ளிசெல்ல
இருநூறு ரூபாய் கிடைத்திட
இவ்வாறு போனாயென்று - அந்த
இறைவனுக்கும் தெரியாதா..

மதியம் மட்டும் சாப்பிட்டு
மிஞ்சிப் போன பணத்தில்
பிஞ்சிகளுக்கு கஞ்சி ஊட்டியது
ஐம்பூத கடவுளுக்கும் தெரியாதா?

வெகு தொலைவு போனாலும்
இங்கிட்டுத்தான் வந்தேன் என்பாய்
எவ்வளவு தூரம் போராயென்று
சொல்லவும் தெரியாமல் போகிறாயே..
என் கணவா ..

சொல்லாமல் வாங்கி வைத்த
சேலையை வீடுவந்து தருமுன்னே
மனை மறந்து மகன்மகளிழந்து
சிதறிப் போனாயே சாலைப்பாதையி்ல்..

எழுதியவர் : நெல்லை பாரதி (4-Jun-13, 6:36 pm)
பார்வை : 109

மேலே