இனிய இரவு...
கிடைக்குமா கிடைக்காதா
ஏக்கங்கள் மனதில்..
வருமா வராதா
எதிர்பார்ப்புகள் நெஞ்சில்..
நெருங்குமா விலகுமா
கேள்விகள் இதயத்தில்..
காலைமுதல் மாலைவரை
கவலைகள் ஆயிரம்..
இனிய இரவினில்,
மறப்போம் துறப்போம்..
இமைகள் மூடட்டும்
மனது தூங்கட்டும்
இதயம் இளைப்பாரட்டும்..
நாளைய விடியல்,
நம்பிக்கையோடு பிறக்கட்டும்..