மழைக்குள் குடை!

சில்லென்று இருந்தது, கண் விழித்து பார்த்தான். வானம் மந்தமாய் இருந்தது வெளியில். மனது சற்றே கனத்தது. இன்றும் அவ்வளவுதானா? என்று சலித்துக்கொண்டே பாயை சுருட்டி அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை விண்ணை பார்த்தான். கண் விளிம்பில் வழிவதற்க்கு காத்திருக்கும் கண்ணீரை போல் மேலும் கருத்திருந்தது, இவனைப்போலவே. என்னவானாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து, கிளம்பினான். கிளம்பும் வேளையில், “அப்பா, இன்றாவது வாங்கிட்டு வாங்க!” என்னும் ஏக்கக் குரல். ”ஆகட்டும்” என்று ஒரு மனதாய் தலையாட்டிவிட்டு வியாபாரத்திற்கு விரைந்தான் உப்பு வியாபாரி. தன் மகள் கேட்ட “குடையை’ இன்று எப்படியேனும் வாங்கியே தீருவது என்று உறுதி எடுத்து “உப்பு உப்போய்ய்ய்” உரக்கக் கத்தி வியாபாரத்தை ஆரம்பித்தான்.



கருத்திருந்த வானம், கத்தி அழ ஆரம்பித்தது. ஏனோ உப்பு கரித்தது மழைநீர் அன்று!

எழுதியவர் : அ.கண்ணன் (6-Jun-13, 10:53 am)
பார்வை : 292

மேலே