நான் பேச நினைப்பதெல்லாம்

ஒரு பெண்மையின் வேட்கை

நீ உறங்கும்போது
என் சூடான மூச்சு காற்றுடன்
உன் முதுகில் முகம் அழுத்தி,
இறுக அணைத்து உறங்கிட ஆசை,
உறக்கம் காணாத தருணம்
உன் மார்பினில் துயில ஆசை,
துயில் கொள்ளும் தருணம்
உன் விரல்கள் என் கூந்தல் வருடிட ஆசை,
அத்தருணம்,
நீண்ட இரவுகள் தொடர்ந்து
பகல் காணவேண்டாமென
இறைவனிடம் விண்ணப்பம் போட ஆசை,
வேண்டா வெறுப்புடன் விடியும்,
காலை பொழுதில்,
நனைந்த கூந்தலுடன்,
உறங்கும் என் முதல் குழந்தையின்
நெற்றியில் முத்தமிட ஆசை.
உன் சிரிப்பொலியை,
என் அலைபேசியின்
அழைப்புஒலியாய் அதிர செய்திட ஆசை.
நீ உண்ட மீத உணவு
உட்கொள்ள ஆசை,
நீயும் நானும் என வாழ்ந்திட ஆசை,
பயம் என்று கொண்டால்,
உன் கையோடு,
உன்னையும் சேர்த்து பிடித்திட ஆசை,
அருகே நீ இல்லாத நேரம்,
நீ உறங்கிய தலையணை எனக்கு,
உன் மார்பல்லவா?
சாலையோர பயணங்களில்,
உன் கரத்தோடு, என் கரம் கோர்த்து,
நிறைந்த காதலுடன்,
நடை தொடர்ந்திட ஆசை.
இவர்களைப்போல் யாருண்டென,
ஊரார் விளைந்திட ஆசை,
மனம் காணும் துயர வேளையில்,
நீ சிந்தும் முத்தம் குறையாதிருக்க ஆசை,
நோய்வாய்படும் நேரத்தில்,
நீ காட்டும் அன்பினால்,
நோய்கள் தொடர்ந்திட ஆசை,
வேலை பளுவில் உண்ணாதிருக்கும் பொழுது,
அவ்வேளையில் நீ ஊட்டும் உணவு,
குறையாதிருக்க ஆசை,
சொல்லிக்கொண்டே போனால்,
நம் காதல் மீதல்லவா கண்படும்.

எழுதியவர் : நிஷா (6-Jun-13, 4:13 pm)
பார்வை : 72

மேலே