உப்பு நீரின் அற்புதங்கள் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் !
பறை அடித்து பக்த்தர்கள் அணிதிரண்டு
தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுத்து.
உப்பு நீரின் புதுமையினை ஏழுநாட்கள் எரித்து காட்டி-
கோவலன் கண்ணகியின் பாட்டும் கூத்தும் ஆடிப்புழுதி பறக்கும்-காட்டா வினாயகர் ஆலய முன்னறலின் நினைவுகளை சுமந்து
வற்றாப்பளை அம்மனை நினைக்கின்றேன்...
தூக்கு காவடியும் பறவைகாவடியும் பாற்செம்புமாக பக்த்தர்கள் திரழும்
வற்றாப்பளையில் வைகாசி வெய்யிலில் நந்திக்கடல் காற்று வீச
பனிச்சமரதின் கீழ்அமர்ந்து வயற்காற்றை சுகமாக சுவாசிக்கும் சுகம்
இன்றும் பச்சை பசேலென என் நெஞ்சில் பதிந்திருக்கின்றது.
காலம் செய்த கோலத்தால் கடல்தாண்டி வாழும் உறவுகளுகுள் நானும் ஓருவன்
அம்மனின் நினைவினை சுமந்து இன்றும் வாழ்கின்றேன் அந்தணணாய்....

