முடிவு ?????????
பிறந்ததும் வாக்கப்பட்டேன்
வறுமைக்கு...
வருடங்கள் பல ஓடின
சுற்றியுள்ள சொந்தங்களின் பாசம் குறைந்தாலும்
அதற்கு மட்டும் என் மீது உள்ள
காதல் குறையவேயில்லை...
எவ்வளவோ முயற்சித்தேன் அதனிடமிருந்து
விலகுவதற்கு முடிவு தோல்வியே!
இறுதியாக,
இறைவனின் நீதிமன்றத்தில் மன்றாடினேன்
ஒன்று விவாஹரத்து கொடு
இல்லை விதவயாக்கிவிடு?...

