இலக்கியம்
மனித
வாழ்வையும்
மொழியையும்
பிரதி பலிக்கும்
கண்ணாடி.
சமுதாயத்தின்
பண்பாடு
கலாசாரத்தை
காவும்
பார ஊர்தி.
ஓர் இனத்தின்
இருப்பை
இழப்பை
பறைசாற்றும்
முரசம்.
தொன்மையின்
பிறப்பிடங்களை
துல்லியமாக
தெரியப்படுத்தும்
முகவரி.
மானுட வரலாற்றை
காலத்தின்
கைப்பைகளுக்குள்
வைத்துக் காப்பாற்றி
அடுத்த தலைமுறைக்கு
கவனமாக காவும்
இனம் என்ற
நிறமூர்த்ததில்
குடியிருக்கும்
தனித்தன்மையான
பரம்பரை அலகு.

