அம்மை அப்பனே அருள் புரிக.....!

அ-ம்மை அப்பனாய்
ஆ-ண்டவன் நீ இருக்க
இ-ல்லை பயம் மனம் தனிலே
ஈ-டேது நின் அடிக்கு ?
உ-யிர் உனை நாடுதே
ஊ-ன் விட்டே சரணடையே
எ-னை ஆட கொள் இறைவா
ஏ-ன் இந்த பிறவிக் கடன் ?
ஐ-யனே வணங்குகிறேன்
ஒ-ரு நொடி தவறாது
ஓ-தி உனை மகிழ்கின்றேன்
ஔ-டதம் கவலைக்கு -

ஃது நின் நினைவதுவாம்...!

க-ருணைக் கடலே....
கா-ட்சியின் நிறைவே
கி-ழக்கிலே விடியலே
கீ-தத்தில் வரியே
கு-ற்றால நாதனே
கூ-த்தாடும் கலைஞனே
கெ-ண்டை விழி யாளண்ணன்
கே-சவனின் அத்தானே...!!!
கை-லாய நாதனே....! உனை
கொண்டாடும் மனம்தனிலே
கோலாகலம் தினம் தோறும்...
கௌ-ரி மனோகரி ராகத்திலே....

ச-ந்தோச கவி படைத்து ...
சா-ம்ப சிவா என்றுருகி
சி-ரம் தாழ்த்தி நான் வணங்கி
சீ-க்கிரமே உனை அடைய
சு-ந்தரப் பெருமாளே
சூ-லம் எந்தியவரே

இன்னும் தமிழ் ஞானம் கொடுமையா....
இருக்கு மேலும் உயிர் மெய்யெழுத்துக்கள்........!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Jun-13, 7:37 am)
பார்வை : 83

மேலே