நிலவு

நிலவை பார்த்தால்

உங்களுக்கெல்லாம் என்னென்ன
நினைவிற்கு வரும் ?

காதலி முகம்
அழகான தோற்றம்
வடை சுடும் பாட்டி

ஆனால் எனக்கு ?

ஒரு பிடி சோறு
ஒரு செல்ல கொஞ்சல்
ஒரு டம்ளர் தண்ணி
அப்புறம்
ஒரு செல்ல கொட்டு
இவை அனைத்தும்

அம்மாவின் கையால்
இனி எப்போதுமே

மீண்டும் கிடைக்காத சுகம்

எழுதியவர் : ந.சத்யா (10-Jun-13, 8:07 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : nilavu
பார்வை : 70

மேலே