இலகிய மனம் பெறுவோம் - சி.எம்.ஜேசு

துடைத்து துடைத்து புதியவைகள்
பதியும் கரும்பலகையைப் போல
இலகிய மனம் பெறுவோம்

அடித்து அடித்து புடமிடும்
இரும்பினைப் போல
இலகிய மனம் பெறுவோம்

கடைந்து கடைந்து எடுக்கும்
வெண்ணையைப் போல
இலகிய மனம் பெறுவோம்

குடைந்து குடைந்து உருவாகும்
மலை வழிப் பாதையைப் போல்
இலகிய மனம் பெறுவோம்

செதுக்க செதுக்க கலையாகும்
கல்லினைப் போல்
இலகிய மனம் பெறுவோம்

எழுதியவர் : சி.எம் .ஜேசு (12-Jun-13, 10:06 pm)
பார்வை : 111

மேலே