அவள்(பெண்)
பூக்கும் பூக்கள் அறியவில்லை
தன் ஆயுள்க்காலம்!
ஒரு நாள் மட்டும் என்பதை
அது போலவே
அவளுக்குள் பூக்கும்........
சிரிப்பு( பூ) கூட அறியவில்லை
தன் ஆயுள்க்காலம்!
ஒரு மணி நேரம் கூட இல்லை என்பதை
சிரிப்பு....
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தவள்
அவள்...சீதை
சிரிக்கக் கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தவள்
அவள்...பாஞ்சாலி
ராமாயணம், மகாபாரதம்
எல்லா இதிகாசங்களிலும்
பெண் என்றுமே
சிரிப்பைத் தொலைத்து விட்டு
கண்ணீர்த் துளிகளை
கொடையாகக் கொண்டவள்
இன்றைய இவள் மட்டும் என்ன....
விதிவிலக்காகி விட முடியுமா??