அநாதை
தாயின் மடி சாய்ந்ததில்லை
தந்தை முகம் கண்டதில்லை
அண்ணன் தங்கை எவருமில்லை
பூமியிலே
நான் வந்த பாதை தெரியவில்லை
பெயர் மட்டும் சூட்டப் பட்டது
இப்பூமியிலே அழகாய்
எனக்கு ஓர்...
பெயர் மட்டும் சூட்டப் பட்டது
அநாதை என்ற ஓர் அழகான
பெயர் மட்டும் சூட்டப் பட்டது