மரண தத்துவம்
மூச்சு இழுக்கும் போது
பிறக்கின்றோம் நாம்
வெளியே விடும் போது
இறக்கின்றோம் நாம்
இழுக்க மறந்தால்
அதுவே நிரந்தரம் ....!
பிறப்பும் இறப்பும்
நமக்குள் ஒவ்வொரு
நொடியிலும் ...!
நோயின் கொடுமையிலும்
காதலின் தோல்வியிலும்
தேர்வின் பயத்தாலும்
உணவின்றி குப்பைகளில்
சேர்க்கின்றதே மரணம் ...!
இதில் என்ன கொடுமை ?
நல்லவனுக்கு ''சொர்க்கமாம் ''
கெட்டவனுக்கு ''நரகமாம் ''
விதையில் ஆரம்பித்து
மீண்டும் ஒரு கனிக்குள்
முடிவதுதானே
வாழ்க்கை தத்துவம்..!
மாண்டவர்களுக்கு மரணம்
ஒன்றுமில்லை
நெருங்கி இருப்பவர்களுக்கு
மரணம் வலியாம்...!
வாழ்வது ஒரு முறைதான்
வாழ்நாள் முழுதும்
வாழ்வோம் தலை முறை
போற்றும் படியாக ...!