சில வார்த்தைகள் மனதை தீண்டிவிட்டுத்தான் மடிகின்றன...
திட்டுக்கள்
காதில் விழாத மாதிரியே
ஒதுங்கி சென்றாலும்
சில வார்த்தைகள்
மனதை தீண்டிவிட்டுத்தான்
மடிகின்றன...
தீண்டும் வார்த்தைகளை
தாண்டிப்போக நினைத்தாலும்
அவை
மாண்டுப்போகும் வரை
வேண்டப்பட்டது மாதிரி
மீண்டும் மீண்டும்
ஓர் அலையாய் வந்து
நம் மனக்காலடியை
தோண்டிவிட்டுத்தான் செல்லும்...
அதில் விழுந்துவிடாமல்
நட்புக்கரங்களை
அழுத்தமாக பற்றிக்கொண்டு
தைரியமாய் எதிர்த்து நிற்போம்!