சொந்தம் சுகமானதா!?!
சுகத்தை தரும்
சொந்தங்களை காட்டிலும்
சோகத்தை தரும்
சொந்தங்களே இன்று அதிகம்!
குழந்தையாய் இருக்கும்போது
நட்பாக இருந்தோரும்
முதுவயதை அடைந்தவுடன்
மோதுவதும் ஏன் தானோ!
இழிசொல்லும் பழிசொல்லும்
இடையூரின்றி வந்துவிழும்!
இடித்துக்கொண்டும் கடிந்துகொண்டும்
இருப்பதனால் என்ன பலன்!?
சொந்தமாக பிறக்கவைத்து
சாமி போட்ட ஆணை இது!
பாசமாக பழகிவந்தால்
பாடைவரை பரமசுகம்!
வாழ்ந்துவிட்டு போ என்று
சாமி போட்ட பிச்சை இது!
வாழும்வரை கூடவரும்
சொந்தத்திலே பேதமேனோ!