தினம் தந்”தாய்”

தந்தை தினம்
தந்தமை
தினம் தந்தை
தந்த
நந்த வனம்
நொந்தமை.

தந்தை தினம்
நினை என்பது
தந்தை தினம்
நினை என்பதை
தந்ததில்லை.

விந்தையாய் தனம்
வந்திடும்
தந்தையாய் தினம்
தந்திடும்
சிந்தையாய் மனம்
சிந்திடும்
எந்தையாய் இனம்
சேந்திடும்.

ஒருநாள் என்னை
நினைப்பாய் என்று
ஒருநாள் என்னை
வனைத்தாய் அன்று.

ஒரு நாள் நினைக்க
ஒருநாளும் நினையேன்
மறு நாள் வதைக்க
மறுமை நாள் நினைப்பேன்.
-------------------------------------------
குறிப்பு
தந்தாய் - தந்தையே!, கொடுத்தாய்.
எந்தை - என் தந்தை.
வனைத்தாய் - அழகாக உருவாக்கினாய்.

எழுதியவர் : ரூஹுல் ரஸ்மி (18-Jun-13, 4:21 pm)
சேர்த்தது : roohulrazmi
பார்வை : 110

மேலே