நேரில் ஏன் கண்ணே ..???

என் அழைப்புகளை
நீ நிராகரிக்கும் போதெல்லாம்
எனக்கு கோபம் வருவது
உன் மீதல்ல கண்ணே ..!!!
கைபேசியை கண்டுபிடித்த ..
நாயகன் மீது ...!!!
ஆயிரம் குறுஞ்ச்செய்தி ..
இலவசம் என்கிறார்கள் ..
நீயோ ஒரு செய்தியனுப்ப ..
ஆயிரம் நிமிடங்கள் எடுக்கிறாய் ..
தவறாக புரிந்து கொள்கிறாய் ..
எல்லாவற்றையும் ...!!!
குறுஞ்ச்செய்தியில் ..
மட்டும் உன் கண் காந்தமாக ..
நேரில் ஏன் கண்ணே ..
காந்தாரியாக ....???