ஏங்குகிறேன்
உருவத்தை கற்றிடும் கண்ணாடி ,
என் உயிரைக் காற்றிட கூடாதா !
மலரிடம் வாய்பேசும் பூங்காற்று ,
என் காதலை உன்னிடம் சொல்லாதா !
உன்னை காணும் அந்த திருநாள் ,
மிக விரைவாய் வந்து சேராதா !
வார்த்தைகள் ஆயிரம் இருந்தாலும் ,
ஒரு வாக்கியம் சொல்ல இயலாதா !
அலைகள் வந்து போனாலும் ,
அதில் என் ஏக்கம் கரைவந்து சேராதா !
கவிதைகள் ஆயிரம் படைத்தாலும் ,
என் காதல் உனக்கு புரியாதா !
நாட்கள் கோடி இருந்தாலும் ,
என்றாவது ஒரு நாள் ,
உன் இதயம் என்னை தேடாதா !
அந்த தருணத்தையே எண்ணி ,
ஏங்குகிறேன் என் தேவியே,
இதுதான் காணாமல் காதலா !!!