நீ விட்டுப் போன நொடிகளில் இருந்து .......

இப்போதெல்லாம்
இரவுகள்
இமைகளை மூடுவதில்லை
உறக்கம் விழிகளைத்
தழுவுவதில்லை
கனவுகள்
கண்களைத் தீண்டுவதில்லை

கண்ணீரே நான் வரையும் கவிதையானது ..!
கவிதைகள் மட்டும் மொழியாகிப் போனது ...!

நீ விட்டுப் போன
நொடிகளில் இருந்து .......

குறைந்து போன என்
பகல்களில் உன் மூச்சுக் காற்று தீண்டாது உஷ்ணத்தால் கரைந்து போகிறேன்

நீண்டு வளர்ந்த என்
இரவுகளில் குளிர் போக்கும்
உன் வெப்பமின்றி உறைந்து போகிறேன்

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (28-Jun-13, 10:21 am)
பார்வை : 98

மேலே