ஆனை வந்துச்சாம் ஆனை... வயது போயிடுச்சாம்......

வயதாகிறது எனக்கு...

முடிந்துப் போன வயதுகளில்
துன்ப முடிச்சுகளை அவிழ்ப்பதிலேயே
ஆயுள் கழிந்தது
இடையிடையே என்னைக் கவ்விப்பிடித்து
வசமாக்கிட அலைந்து திரிந்த இன்பக்குளிரை
கணக்கில் கொள்ளாமலேயே
வயது என்னைத் தாண்டி செல்கிறது....

இன்னமும் வரும் வயது
வாலிபக் களிம்பு பூசி வரலாம்
ஒருவேளை..!!
காத்திருக்கிறேன் என் பேரனின்
'ஆனையாய்....!!'

எழுதியவர் : வீரன்தாமரை (1-Jul-13, 9:14 pm)
பார்வை : 73

மேலே