உளறலின் குரல்

கந்தக வெளியில்
கால்களை நனைத்து
நனைத்தது கடவுள்....
நான் என்ன செய்வேன்
என்று கூப்பாடு போடும் கூட்டங்களே ..
அறிவும் உணர்வும் இருந்தால்
அதிசயம் உங்கள் கையில்
அது கடவுளினால் அல்ல
உங்கள் கருணையினால் மட்டுமே
எனக்கான புராணத்தை நீங்களே எழுதி
அதில் எகத்தாளம் பேசும்
உங்கள் நோக்கம் ...
ஏற்ப்பதில்லை எவர்மனமும் ..
கடவுளே எழுதியதாக
எந்த காவியமோ கதையோ இல்லையே
உங்களின் ஏக்கமும் எண்ணமுமே
எனக்கான கதையாக உருமாற்றினீர்கள் ...
அதில் எனது ஆதிக்கம் எதுவுமில்லையே ..
நான் கேட்டதில்லையே
கோவிலும் குளமும் ,கோபுரமும் பீடமும் உங்களின் பகட்டுக்காக வைத்துவிட்டு
என் என்னை சாடுகிறீர்கள்
மனித புத்தியே மற்றவரை சாடி
குறை கூறுவதில்தான்
சந்தோஷ பட்டுக் கொள்ளுங்கள் ..
தாயை பழிப்பதில் தான்
உங்கள் தன்மானம் என்றால் ..
கடவுள் உறவு கொண்டானாம்
நான்மட்டும் என்ன விதிவிலக்கா என்று நாக்கழுகபேசும் நஞ்சர்களே .
அவனே தவறிவிட்டான்
நான் தவறுவதால் என்ன குற்றம்
என்று நீங்கள் குற்றம் செய்ய ஏதுவாக
படைத்தது தான் இத்துணை கதைகள் மறவாதீர்...
கடவளின் காவியத்தை
படைத்தவன் கடவுளில்லை ..
நம்போன்ற மனிதன் தான் ..
அவனது ஏக்கம்தான் ஏட்டில் எழுத்தாக ...தங்களைப்போல் ..
உங்களைப்போல் ...
எங்களைப்போல்
சிவா புராணத்தை படைத்தது சிவனுமில்லை
லிங்க புராணத்தை எழுதியது லிங்கமும் இல்லை கந்த புராணத்தை படைத்தது கந்தனுமில்லை
விநாயகர் அகவல் விநாயகன் அருளியதுமில்லை
கருட புராணம் கருடன் வந்து
எழுதி சென்றதுமில்லை
படித்ததும் நீங்கள் .. படைத்ததும் நீங்கள்
பரிகாசம் மட்டும் கடவுளையா ?
கோவிலில் இருக்கும் சிற்ப்பத்தை கூட
கடவுள் படைத்து கண்ணில் விட்டுவிட்டான்
நான் மட்டும் அதுபோல் இருந்தால்
என்ன தவறென்று வியாக்கியானம் பேசுவது
சிற்ப்பகலையை சீரழித்த சிரசுதான்
உங்களுக்கு சிம்மாசனம்
வேதங்களையும் புராணங்களையும்
புரட்டாமல் கேட்பார் கேட்டு
கேள்வி கேட்பது முறையற்றது
தந்தையின் பெயர் தெரியும்
தந்தையின் தந்தை பெயர் தெரியும்
அந்த தந்தையின் தந்தையின் தந்தை பெயர்
தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனால்
தரம்கெட்ட தன்மானமற்ற குடும்பத்தில்
ஜெனித்ததாக சங்கல்பம் கொள்வது ....
பிறருக்கு போதிக்குமுன் உங்கள் கண்ணில் இருக்கும் பாறாங்கல்லை தூக்கி போடுங்கள் ..
கலையையும் காவியத்தையும்
உள்ளுணர்வாக கொள்ளுங்கள்
உங்களின் இழிந்த எண்ணங்களை
அதில் ஏற்றி இழிவுபடுத்தாதீர்
ஆயகலைகள் 64கையும் கட்டிக்காத்த
பெருமை கொண்ட மண்ணில்
வெட்டிப் பேச்சிற்கு தாரை தப்பட்டங்களுடன்
குலவையிடும் கூட்டத்தை கூறு போடுங்கள்
இழிந்த எண்ண கோர்வைகளை ஒழியுங்கள்
உலகம் உருப்படும் தானாய் ...
ஓசையை விடுத்து
ஆசையை அலைய விடுங்கள்
பாவத்தையும் கோபத்தையும் பலியிடுங்கள்
நேசத்தையும் பாசத்தையும் பரிசளியுங்கள்