நட்பு !

நட்பு !
நீ
என்னுள்
எண்ணையாய் இருப்பதால் நான்
எரிகிறேன் தீபமாக !
நான்
அணைந்தாலும்
எனக்காக நீ
ஒளிர்வாய் என்பதே
சிறப்பு !

பிறப்பால் இணைந்தோமா ??
இறப்பிற்கு பின்னாலும்
வாழ்வதற்காய் பிறந்தோம் !
நட்பில் இணைந்தோம் !!

சேர்ந்திருந்தபோது
எல்லாம் சுகம் !
பிரிவினில்
நினைவுகள் சுகம் !
ஒரு குடையில் நனைந்தோம்
ஒரு துணியில் துடைத்தோம்
ஒரு மிட்டாயில்
உறவு கீதம் பாடினோம் ! - அந்த
நினைவுகளின் சுகம்
கண்களில் ............ !
நிஜமாகிறது !!
நட்புக்குள் நட்பே
சுகம் என்கிறது மனம் !

நட்பு
இதயத்தின் மொழி ! nal
உதயத்தின் வழி !!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (3-Jul-13, 7:41 pm)
சேர்த்தது : mohd farook
பார்வை : 111

மேலே