ஜனன நாள் வாழ்த்து
04.07.2013 இன்று
பிறந்தநாள் காணும்
எங்கள் அன்பு மருமகள்
திவ்யாவுக்கு இனிய
வாழ்த்து கவி .
கார்மேகம் போல்
கருணை உள்ளம் கொண்டவள் !
வான் நிலவு போல்
மென்மை குணம் கொண்டவள் !
இன்றுதான் !
அன்பின் அடித்தளம்
பிறந்த தினம் !
இன்றுதான் !
அழகின் பிறப்பிடம்
பிறந்த தினம் !
இன்றுதான் !
எளிமையின் இருப்பிடம்
பிறந்ததினம் !
இன்றுதான் !
வலிமையின் முகவரி
பிறந்த தினம் !
இந்த நாள்
புன்னகை உன்னிடம்
தஞ்சம் கொண்ட நாள் !
படிப்பில் நீ
புலி என்று சொல்லமாட்டேன் ,
ஏனென்றால் படிப்பில்
நீ கில்லி !
நீ எப்போதும்
முன்னுக்கு வருவாய்
எல்லோரையும்
பின்னுக்கு தள்ளி !
புசுபுசு பிரியாவுக்கு
நீ அக்கா !
எங்களுக்கு நீ
எப்பவுமே பக்கா !
இந்த இனிய பிறந்த
நன்னாளிலிருந்து
மூன்று வேளை உணவை
முறையாக கடைபிடிப்பாய்
என்ற நம்பிக்கையோடு
உன்னை
நீர் நிறைந்த நெல்வயல்போல்
இனிமையோடும் வளமையோடும்
செம்மொழியாம்
தமிழ்மொழிபோல்
சிறப்போடு வாழ
வாழ்த்தும்
ஆருயிர் நெஞ்சங்கள் .
*****உமா சபா கலை பாண்டியன் .