காதலை பற்றி எழுதிட மாட்டேன் .....!!!!!

காதலை பற்றி எழுதிட மாட்டேன் என்றேன்
என் தமிழ் என்னை கேட்டது
எதை பற்றி எழுதுவாய் என்று?
அன்னை பற்றி என்றேன்
உன் தாயை நீ காதலிக்கவில்லையா என்றது
நண்பனை பற்றி என்றேன்
உன் நண்பனின் அன்பில் காதல் இல்லையா என்றது
வாழ்வை பற்றி என்றேன்
காதல் இல்லாதது வாழ்வாகுமா என்றது
சரி, மரணம் பற்றி என்றேன்
உனக்காக அழுகின்ற மனதில் காதல் உள்ளதே என்றது...
இறுதியாய் உன்னை பற்றி என்றேன்
சிரித்தது,
என் மீது கொண்ட காதலால் தான்
நீ என்னையே எழுதுகிறாய் என்றது.....!!!

எழுதியவர் : L .S.Dhandapani (3-Jul-13, 7:23 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 71

மேலே