????இப்படித்தான் எழுதுவேன்¿¿¿¿

சைவ சாதியினரே!
தெய்வ சாதியினரே!

போதி யடியிலும்
சாதி போற்றும்
சகுணக்காரியினரே!

இருகையேந்திஇருளில்
இரவல் தேடும்
ஈனச்சாமியினரே!

ஈயப்பாத்திரத்தில்
ஈ மொய்த்த
உருண்டைகள்
உம் தொண்டையில்
அரவவில்லையா?

மரித்துப்போன
மண்கூடுகளில்
மன்னரின் கடவுள்
மாண்டு கிடக்கிறதே!
கருமாதி முடிக்காமல்
தெருவில் தேர்ப்பவனி
யிழுத்து வந்தால்
உம் கடவுளுக் கது
ஈமக்கிரியை யல்லவா?

மாய்ந்து போன
மலர்களைத்தொடுத்து
மாலை சூட்டினால்-உம்
கடவுளுக் கது
மலர்வளையங்கள்
அல்லவா?

குடமுழுக்கு விழாவில்
கும்பத்தில் ஏறிமிதித்து
தண்ணீர் ஊற்றினால்
உம் கடவுளின்
திவசம் அல்லவா?

அய்யர்வீட்டுபிண்டச்சோறு
காக்கையின்கழிவாயில்
நாறிக்கிடந்தால்
படையளில் வைத்த
பச்சரிச்சோறும்
நரகம் அல்லவா?

ஈமக்காட்டில் எரிவதே
ஈராறு திரிகளில்
எரியும்!
ஆராதனைவிளக்குகளே
உம் அறக்கடவுளுக்கு
அடையாளமாய் வைத்த
கொல்லி யல்லவா?

இனியும் எவனும் எனை
என் சாதி யென்று
கேட்பானாயின்
அவனின்
கடவுளைத்தான்
மிதிப்பேன்!

எழுதியவர் : (3-Jul-13, 7:08 pm)
பார்வை : 75

மேலே