- நிலா
- நிலா
பொங்கிவரும்
பொன் சிரிப்பில்
பௌர்ணமியாய்
வெட்கத்தின்
முகம் மறைப்பில்
அமாவாசையாய்
நிலாச்சோறு ஞாபகத்தின்
நினைவுச்சின்னமாய்
இயற்கை எனும் இருட்டுக்கு
அகல் விளக்காய்
விண்மீன்களின்
தூக்கம் களைத்த
தேவதையாய்
அழகென்பதை அகத்தில்
வைத்த
அகங்கார கிரீடமில்லாத
ஓர் அழகி
- நிலா
- ஜெகன். G

