உன்போல் இல்லையடி ...!!!

ரப்பர் பேண்டும்
ரணகளம் செய்யும்..
“அவள் “ கூந்தலில்
ராட்டினம் ஆட...




ஸ்டிக்கர் பொட்டும்
ச,ரீ, க, ம பாடும் ..
“அவள் “ நெற்றியில்
முத்தமிட ..




வார்தைகலெல்லாம்
தவமிருக்கும்..
“அவள்” உதடுகளால் தான்
உச்சரிக்கப்பட வேண்டுமென்று..



பாசிமணிகளும்
ஏங்கித் தவிக்கும்..
“ அவள்” கழுத்தினில்
ஊஞ்சலாட ..




வளையல்களும்
வளைந்து கொடுக்கும்..
“ அவள் “ கைகளில்
துள்ளி விளையாட ...




மோதிரங்களும்
மோட்சம் பெறும்..
“அவள்” விரலிடுக்குகளில்
சிக்கித் தவிக்க..




ஒட்டியானங்களும்
ஆசைப்படும்..
“அவள்” இடையினில் உட்கார்ந்து
ஆட்சி செய்ய ..




கொலுசுகளும்
கொள்கையாய் கொள்ளும்
“அவள்” கால்களில்
சிணுங்குவதை ...




மெட்டிகளும் காத்திருக்கும்
“அவள்” திருமண நாளை
எதிர்பார்த்து..
“அவள்” விரல்களால் மிதிபட ...




இவைகளும்
போட்டியிட ..
இவைகளுக்கெல்லாம்
போட்டியாக..
நானும்கூட


“சொல்லத்தெரியாமல்”...!!!

-

-நினைவுகளுடன்...
ஜி.உதய்.. @ யூ.கே.ஜி

எழுதியவர் : G.Udhay (11-Jul-13, 11:51 am)
பார்வை : 151

மேலே