திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு !!!

உயிரினப் படைப்பில் உயரிய படைப்பாக மேற்கூறிய
ஐந்தரிவுகளோடு சிந்தித்து செயல் படும் திறன் கொண்ட மனம் என்னும் ஆறாம் அறிவை பெற்ற உயிரினமாக மனித இனம் திகழ்கிறது .
ஆனால் ஆறாம் அறிவுக்கும் மேலான ஏழாம்
அறிவு ஒன்று இருப்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் thirukkuralil
கூறியுள்ளார்
அந்த ஏழாம் அறிவு எனபது யாது ?
ஐயப்படா அது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (திரு .702)
ஒரு சிறிதும் ஐயமே இல்லாதவகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்திலுள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்தும்தான் என்னத்தை அவர்க்கு உணர்த்தி இயங்க வைக்கும் வலிமை கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்றவேண்டும்

திருவள்ளுவர் இதையே ஏழாம் அறிவாகக் குறிப்பிட்டுள்ளார் .ஆறறிவுள்ள மனிதன் அந்த ஏழாம் அறிவை எப்படி பெறமுடியும் ?
திருவள்ளுவர் திருக்குறளிலே விடையை
வைத்திருக்கிறார் .
தவம் அதிகாரத்தில்
கூற்றம் குதித்தாலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு (திரு.269)
தவநெறியின் மூலம் ஆன்ம ஆற்றலைப் பெற்றவர்கள் பெற்றவர்கள் எமனையும் எதிர் நின்று மரணத்தைத தாண்டி வெற்றி கொண்டு நீண்ட நாட்கள் வாழும் வலிமையுடையவராக
இருப்பார் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் .
தவத்தின் மூலம் ஆற்றலை எப்படிப பெறமுடியும் ?

மனத்தை ஒரு நிலைப் படுத்துவதே தியானம் .
நீண்ட நேரம் தியானத்தில் அமர்வதே தவம் எனப்படும் நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்றை
தேவையான கால அளவுக்கு உள்ளே நிறுத்தி பின்னர் வெளியிடும் பயிற்ச்சியை த தொடர்ந்து செய்யும் போது மனம் அடங்கும் .. இந்நிலையை நிஷ்டை எனவும் கூறுவார் .அப்போது காலம் இடம்
நிகழ்வுகள் யாவும் இருந்த நிலையிலும் உணர முடியும் .
மனம் மேலும் மேலும் ஒடுங்க ஒடுங்க தன் உருவம் மறைந்து உயிரில் கலந்து நிற்கும் .
இதையே ஆன்ம தரிசனம் என்பர் .
இதனைப் படிப்படியாக செய்வதால் துரிய நிலையில் நின்று முக்தி நிலை பரமானந்த நிலை பேரின்ப நிலை என பல நிலைகளும் வந்துசேரும்
இந்த உணர்வு நம் உடலில் உயிருக்குள்ளேயே
அனுபவிக்க வேண்டியது இந்த நிலையை அடைய பல ஆண்டுகள் பயிற்சி செய்து வந்தால் முன்னர் திருவள்ளுவர் கூறியுள்ள ஐயத்திற்கு இடமில்லாமல் தன் எதிரில் நிற்பவரின் உள்ளத்தில் உள்ளக் கருத்தினை அறிந்து கொள்வதுடன் தான் எண்ணிய செயலை அவர் மனத்தில் செலுத்தி தன் செயலை செய்து கொள்ளும் வலிமை பெற்றவராக
ஏழாம் அறிவைப் பெற்றவராக வலம் வரலாம்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் (திருக்குறள் 265)

தவம் மேற்கொண்டோர் தாம் அடைய எண்ணிய தை அடைய முடியும் அதை அறிவுடையவர் விரும்பி மேற்கொள்வர் . ஏழாம் அறிவைப் பெறுவது முடியும் என்பதை இதன் மூலம் அறிந்து தெளிவடையலாம் .
தவத்தின் வலிமை மிகப் பெரியது !

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (13-Jul-13, 11:25 pm)
பார்வை : 297

மேலே