நண்பன் நல்லவன் என்றால் எதிலும் நாயகன் நீங்களே

பதின் பருவத்தில்
மதில்ப் பூனையாய்
தொழிற்கல்லூரி
புகுந்தோம்

எங்கு பார்க்கினும்
புது முகங்கள்
அதில் ஒளிரும்
பல கனவுகள்

மூன்றாண்டில்
ஓராண்டு பிடித்தது
ஒத்த
இதயங்கள்
இணைய

பதின் பருவப்
பிள்ளைகள் நலம் பேண
பெற்றோர் நெஞ்சில்
பிறக்குமென்றும்
பெருங் கவலை

கல்வி ஒருபுறம்
கடமையாய்
கருத்துடன் நிற்க
ஹார்மோன்களின்
கலகத்தால்
காண்பதெல்லம்
வண்ண மயமாய்

இப்பருவத்தில்
நண்பனும்
நட்பும்
நல்லவர்களானால்
நல் வழிப்பாதை
மூடர்களானால்
முள் வழிப்பாதை

கடவுள் அருளால்
இணைந்தவர்கள் யாவரும்
இனியவர்களே

குழுவாய் இணைந்தோம்
கூடிப் படித்தோம்
எழிலாய்த் தொழிலை
நாடிப் படித்தோம்

இப்பருவ
இச்சைகளை அடக்கினால்
முப்பருவமும்
இனிதாகும் என
மூத்தோர்
மொழிந்தது சரியே

மோகம் கொண்டு
அலைந்தவர்கள்
சோகமாய்
வேலையின்றி இறுதியில்

எங்கள் குழு
எதிலும் முதன்மையாய்

கட்டுடன் இருந்த
கடுந்தவம்
கடைசியில் நற்க்
கதிராகவும்
விதைத்த நல்விதை
விளைந்து மீண்டும் நல்
விதையாகவும் மிளிர்ந்தது....

பல கனவுகளில்
பழமாக எங்கள் கனவு
பலனாக நல்ல
பணிமனைப் பட்டயம்
பறந்தோம் சுதந்திர வானில்
பறவைகளாகச் சிறகடித்து
பெற்றவர்களின் துயர் துடைத்து.....

எப்பருவத்திலும்
எவ்விடத்திலும்
நண்பன்
நல்லவன்
என்றால்
எதிலும்
நாயகன் நீங்களே......

எழுதியவர் : நஞ்சப்பன் (14-Jul-13, 12:34 am)
பார்வை : 347

மேலே