ஏப்ரல் மாத நினைவுகள்...

அந்த ஏப்ரல் முதல் தேதி நினைவிருக்கா உனக்கு....
காதலிப்பதாய் சொல்லிவிட்டு....
மறுநொடியே குறும்புப் பார்வையோடு என்னிடம்....
"ஏப்ரல் பூல்" சொல்லிச்சென்றாய் அன்று....
உனக்கு தெரியுமா பெண்ணே....
அந்த ஏப்ரல் மாதத்து முட்டாள்...
இன்னும் உன் பொய்யில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...