மீண்டெழும் பாண்டியர் வரலாறு - ஆசிரியருக்கு முன் ஜாமீன்....!

மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற புத்தகத்தை எழுதிய கு.செந்தில் மள்ளர் என்ற எழுத்தாளர் படைப்பாளி இன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்த நூல் சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் இருப்பதாகக் கூறி தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவர் மீது சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் கு.செந்தில் மல்லர் அவர்கள். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார்.

இந்த புத்தகத்தை விற்பனை செய்ததாக செந்தில் மள்ளர் அவர்களின் மாமனாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல் துறை...முன்ஜாமீன் நிபந்தனையாக காவல் துரையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்..தினமும் சாத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கன்டிசனுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

அதுஎன்ன சட்டம்...? தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து...? கொலைகாரனும் கொள்ளைக்காரனும் கையெழுத்து போட வேண்டும்...
புத்தகம் எழுதிய எழுத்தாளரும் கையெழுத்து போட வேண்டும்..? ரொம்ப அருமையான சட்டமப்பா இது....

மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்தை தடை செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று படைப்பாளிகள் சங்கம் மற்றும் எழுத்தாளர்கள் அறிவித்துள்ளனர்.

என்றாலும் ' மீண்டெழும் பாண்டியர் வரலாறு ' புத்தகத் தடை எங்கோ...
யாருக்கோ...எவருக்கோ என்ற நிலை தான் இன்றும் தொடர்கிறது தமிழகத்தில்...அந்த அளவிற்கு தமிழன் தறிகெட்டு சீரழிந்து உள்ளான் என்று கருதலாமா..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (16-Jul-13, 2:36 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 189

மேலே