5,566 க்ரூப் - 4 வேலைக்கு 16.13 லட்சம் பேர் போட்டி...?! நாடு தாங்குமா...?

தமிழக அரசின் பல்வேறு காலி இடங்களான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரித்தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர் ஆகியோர் இந்த தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்துகிறது.

சென்ற முறை வி.ஏ.ஒ. தேர்வுக்கு அதிக பட்சமாக 12 லட்சம் பேர் எழுதினார்கள் அந்த காலி இடங்களும் சில ஆயிரங்களே...

ஆக, ஒரு இடத்திற்கு சுமார் 290 பேர் போட்டி போட வேண்டும்....இந்த எண்ணிக்கையில் அதாவது இந்த சதவீதத்தில் வேறு எங்குமே போட்டி இருக்க முடியாது. வேலை இல்லாத திண்டாட்டம் அந்த அளவிற்கு தமிழ் நாட்டில் உள்ளன என்பதையே இந்த போட்டி தேர்வு விண்ணப்பங்கள் காட்டுகின்றன...

அரசுகளும் அரசியல் கட்சிகளும் ( திமுக மற்றும் அதிமுக ) இந்த உண்மையை மறைத்து நாடும் மக்களும் வளமாக இருப்பதைப் போன்று பரப்புரை செய்கிறார்கள் என்று கருதலாமா...?

1000 க்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் மையங்களில் வீடியோ பதிவு செய்யப்படும். பாடத்திட்டத்தை பின்பற்றி தேர்வர்கள் நன்றாக படித்தால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். 5,556 இடங்களுக்கு 16.13 லட்சம் பேர் போட்டி போடுவதால், இதிலிருந்து திறமையான தேர்வர்கள் தான் வெற்றி பெற முடியும். எனவே, அரசுத் துறைகளுக்கு நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள் என்று கருத முடியுமா..?

தோராயமாக ஒரு அப்ளிகேசன் நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட ( கண்டிப்பாக நூறு ரூபாய் இருக்காது என்பது வேறு விஷயம்..)
16.13 லட்சம் பெருக்கல் குறியுடன் ரூபாய் நூறு சேர்த்து கணக்கீடு செய்க...
இவ்வளவு கோடி ரூபாய் வேறு கிடைக்கும் அரசுக்கு...! இதில் எவ்வளவு முறைகேடுகள் ஊழல்கள் நடைபெறும் என்பது ஒரு தனியான விஷயம்.

அந்நிய முதலீடும், பல்வேறு நாடுகளின் கார்ப்பரேட்களும் தமிழ் நாட்டில் வந்து குடிபுகுந்து சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற வரிச்சலுகையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்...இவர்களால் வேலை வாய்ப்பு உருவாகும்.... பெருகும்... என்று சொல்வதெல்லாம் ஆக, மிகப்பெரும் பொய்யோ..? என்று கேட்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (16-Jul-13, 3:31 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 118

மேலே