சி.பி.ஐ. க்கு குறைவான அதிகாரங்களே உள்ளன - உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல்..! வேறு யாரிடம் அதிகமான அதிகாரம் உள்ளது..?
தங்களுக்கு குறைவான அதிகாரங்கள் தான் இருக்கின்றன. உள்துறை அமைச்சரை நேரடியாக அணுகும் வகையில் அதிகாரம் தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில் சிபிஅய் தெரிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்க முறைகேட்டில் அதாவது 1.80 லட்சம் கோடிகளில் ஊழல் தொடர்பாக விசாரணையில் சிபிஅய் க்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம், மத்திய அரசுக்கு வழங்கிய உத்தரவை தொடர்ந்து மத்திய அரசும் பதில் பிராமண மனு தாக்கல் செய்திருந்தது.
சிபிஅய் க்கு தன்னாட்சி அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் இது தொடர்பாக சிபிஅய் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதற்கு பதில் அளித்த சிபிஅய், தங்களுக்கு மிகக் குறைவான அதிகாரங்கள் தான் இருக்கின்றன. மத்திய அரசின் செயலாளருக்கு இணையான அதிகாரம் வேண்டும், சிபிஅய் இயக்குனரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்று ஆண்டுகள் என்று இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு அதிக அளவில் அதிகாரங்களை வழங்கியுள்ள காங்கிரஸ் அரசு சிபிஅய் - ஐ தனது அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தி வருவதால், இனி வரும் அரசியல் கட்சிகளும் அதாவது ஆட்சிக்கு வருபவர்களும் இவ்வாறே சிபிஅய் - ஐ பயன்படுத்துவார்கள் என்ற நடைமுறையை உருவாக்கி விட்டார்கள்.
என்.எஸ்.ஏ. ற்கு வழங்கியுள்ள அதிகாரம் வானளாவியது. இந்தியப் பிரதமரை விட, இந்திய ஜனாதிபதியை விட ,தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் இயங்கும் இந்த என்.எஸ்.ஏ அதி பயங்கர அதிகாரங்களை கொண்டுள்ளது.
இப்படி இருக்கையில் சிபிஅய் - க்கு எவ்வாறு அதிக அதிகாரம் வழங்குவார்கள்..? என்று கேட்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு