அப்பா

உறவுகளின் உன்னத்ததை
கற்று கொடுத்தவர்
நீங்கள்
இந்த உன்னதமான
உறவின் பரிவையும்
எனக்கு சொல்லி தரும் நாள்
என் திருமண நாளா?

அப்பா
அரவணைத்து
பாசத்தை காட்டி
பாதுகத்தவரே

உங்கள் கை பிடித்து
நடை பழகிய நாளும்!

பள்ளி முடியும் நேரத்தில்
வகுப்பறை ஜன்னல்
வழியாக
உங்கள் முகம்
காண முற்பட்ட பொழுது
நீங்கள்
அதே ஜன்னல்
வழியாக
என் முகம் பார்த்துகொண்டு இருந்த நாளும்!

மதிப்பெண் குறைந்தாலும்
திட்டி கொண்டே
கையெழுத்திட நாளும்!

கல்லூரி விடுதியில்
இருந்து விட்டுக்கு
வந்த நாளில்
சாப்பிட்டு தூங்க கூடதா என்று
அக்கறை கலந்த கோபத்தில்
கூறிய நாளும்!

என் கண்களில் கண்ணிருடன்
நிழலாடுகிறது

பெண்ணாக பிறக்க
மாதவம் செய்திருக்க வேண்டுமா?
நான் எந்த ஒரு தவமும்
செய்யவில்லை

அடுத்த பிறவி
ஒன்று இருந்தால்
நிச்சயம் செய்வேன்
உங்கள் மகளாகவே பிறந்திட .....

என் திருமணத்தியில்
என்னை கண்ணியதரம்
செய்த தருணத்தியில்
உங்கள் கண்ணியில்
கண்ட கண்ணீரால்
மறந்தேன்
நான் உங்களை பிரிவதை !!

நீங்கள் என் பிரிவை
எப்படி எதிர்கொள்ளவிர்கள்
என்று நினைக்க
தொடங்கிவிட்டேன் ...........

எழுதியவர் : திவ்யா (19-Jul-13, 3:05 am)
Tanglish : appa
பார்வை : 172

மேலே