நேரம்

நான் காசு கொடுத்து வாங்கிய கடிகாரமே,
என் காலத்தை அழித்துக் கொண்டிருக்கிறது...
என் பொழுதுகள் எல்லாம்,
வீண் விரயம் எனும் வேலையை மட்டும்,
செய்து கொண்டிருக்கிறது...
நான் என்ற ஒருவனை கொண்டு,
நான் ஒன்றுமே சாதிக்கவில்லை...
எனதின் எண்ணங்கள் எல்லாம்,
(நாளை முதல்)
எனும் வார்த்தையிலேயே தாண்டவமாடுகிறது...
என் இலட்சியம் பற்றிய கேள்விக்கு,
வினாக்குறியே விடையாக தெரிகிறது...
எதிர்வரும் காலங்கள் எல்லாம்,
என்னிடம் ஒன்றைத்தான் வேண்டுகின்றன...
என் கணணியோடு கழியும் நேரங்கள் எல்லாம்,
கல்வியோடு கழிய வேண்டும் என்று...

எழுதியவர் : ஹனாப் (19-Jul-13, 11:01 am)
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே