வாலிக்கு ஒரு பாமாலை
வாழ்ந்து மடிந்த வரலாறே
உன்னை வணங்கி பணியும் கவிஞன் நான்
நேற்றுவரை நீ வழிகாட்டியவன்
இன்றுமுதல் நீ வரம் கொடுப்பவன் .........
மனிதனாக பிறந்த நீ
இறைநிலைக்கு போய்விட்டாய்
கடவுளின் வார்த்தைகளை
கவிதையாக வடித்துவிட்டாய் ..........
பாரிகொண்ட பெயரை நீ
கவிபடைத்து முந்தி நின்றாய்
காலங்கள் போற்றுகின்ற
கவிஞான மறைந்துபோனாய் .........
.
கவி என்னும் பூ எடுத்து
நற்கவிகளை மாலையாக்கி
தமிழன்னையை அலங்கரித்தாய்
இன்று உனக்கு அலங்காரமோ ..........
புது புதிதாய் பாட்டெழுதி
புது மெட்டு நீ தொடுத்து
இன்பம் கொடுத்த தமிழனை நீ
இன்று துன்பம் கொள்ள செய்தாயே ..........
நெஞ்சில் இருக்கும் சுமைகளை
நீக்க வந்த உன் பாட்டு
இன்று நெஞ்சில் சுமை ஆனதேனோ
நின்று போன உன் மூச்சால் ..........
பல துறையில் பாட்டெழுதி
பக்குவப்பட்ட கவிஞன் நீ
உன் புகழை நீ பாட
ஒரு வரியும் கிடைக்கலையோ .............
காதலுக்கு தூதுவிட்டாய்
கருத்துள்ள கவி படைத்தாய்
பெண்ணுலகம் போற்றி பாடினாய்
இன்று விண்ணுலகம் சென்றாயோ ...........
வித்தகரும் ஏற்றுக்கொள்ளும்
தத்துவக் கவிபடைத்தாய்
காவிய தலைவனென்று உலகம்போற்ற
நல்ல கவிஞனாய் வலம்வந்தாய் ................
பாடுபொருள் அனைத்தையும்
சல்லடைபோட்டு பாடிவிட்டாய்
உன் சரீரம் மட்டும் சாம்பலாகும்
உன் சாதனைகள் என்றும் வாழும் ............
இதோ இன்றுமுதல்
உனக்கொரு கவியரங்கம் உன்னைபற்றி கல்விபாடம்
சிலைநிறுவி கோவில்கட்டி சிந்தையில்நிறுத்த ஆளுமுண்டு
நீ வாழ்ந்தவரை மனிதனானாய்
வாழ்ந்தபின்பு கடவுளானாய்............