ஓவியம்
ஓவியம்
உயிரில்லா உயிரோட்டம்...
மெளனமான பேசும்படம்...
அசையாத புகைப்படம்
ஆயிரம் கதை சொல்லும்...
பசுமையான புல்வெளி
இயற்கையின் கவிபாடும்
நகராத நங்கை.....
நகைத்து கொண்டே நம்மைபார்கும்
விலகாத வெள்ளை அருவி
வீழதிடாமல் வியந்து நிர்க்கும்
கண்களால் கவிதை படைக்கும் ஓவியனுக்கு
பிரம்மனும் தலை வணங்கலாம்
இறப்பில்லா படைபல்லவா?
-அமுதநிலா

