பிறந்த நாள்

பிறந்த நாள் வாழ்த்து
நேற்று பிறந்த நாள் கண்டு (21.07.2013)
இன்று பிறந்த நாளை கொண்டாடி (22.07.2013)
நாளை பிறந்த நாளை கொண்டாடபோகும் (21.07.2014)
அன்பிற்குரிய திரு .வைத்தியநாதன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்து கவி.

சக்கரம் போல் சுழன்று வேலையை
அக்கறையோடு செய்து முடிப்பதில்
நீங்கள் ஒரு கில்லாடி !

பிறர் மனம் துன்புற்றால்
உங்களின் மனமும் துன்புறும் .
பிறர் மனம் இன்புற்றால்
உங்களின் மனமும் இன்புறும் !

அந்த வகையில் நீங்கள்
ஒரு கண்ணாடி !

யார் வந்து உம்மை பார்த்தாலும்
வேலை பளுவிற்கு இடையிலும்
இன்முகத்தோடு வரவேற்கும் தன்மை
எல்லோரையும் கவரும் இது உண்மை !

தேனீ இடமிருந்து சுறுசுறுப்பை
கற்று கொண்டவர் நீங்கள் !
ஏணி இடமிருந்து பிறருக்கு உதவ
பற்று கொண்டவர் நீங்கள் !

கவிஞரே ! என்று பாசத்தோடு அழைக்கும்
அறிஞரே ! நீங்கள் வாழ்க ! பல்லாண்டு
செம்மொழியாம்
தமிழ் மொழிபோல்,
திகட்ட திகட்ட தித்திக்கும்
தேன் துளிபோல் !

*************.நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (22-Jul-13, 5:09 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 72

மேலே