உன்னை கண்டேன்
கண்களில் கண்டேன் மின்சாரம்..
மின்சாரம் தாக்கினால் ஒரு முறைதான் மரணம்..
இந்த பெண்சாரம் தாக்கினால் ஒவ்வொரு முறையும் மரணம்.. கண்ணை கொண்டு ஒரு மனிதனை கொல்ல முடியுமா...
உன் கண்கள் எனை கொல்கிறதே...
உன் கண்கள் கருநிற பூசெண்டுகள்..
வண்டாக உனை சுற்றுகிறேன்...
ஆனால் உன் கண் மலர்களே என்னை மொய்க்கிறதே...
என் உதிரம் உறிஞ்சுகிறதே...
உன் பார்வை என் வேட்கை...
ஆனால் நீயோ எனை வேட்டையாடுகிறாய்...
உன் இமைகள் சிமிட்டினால் என் ஒரு யுகம் கடந்ததடி...
உன் ஒரே ஓர பார்வையில் என் பிறவியே முடிந்ததடி..
போதும்...
உன் கண்களை கண்டதற்கே இந்த ஜென்மம் போதும்..!!!