பெண்ணவள்

கண்டாங்கி சேலை கட்டி
காதோரம் ஜிமிக்கி போட்டு...
கரு மேக கூந்தலுக்கு
பத்து முலம் மல்லி சூடிக்கொண்டு
பூ போல் இருக்கும் உன் பிஞ்சு கைகளுக்கு
சிவக்கும் மருதாணியிட்டு..
காந்தமாய் தாக்கும் உன் மின்சார கண்ணீர்க்கு
என்னை மயக்கும் வசிய மையிட்டு..
என் மூச்சை நொடி பொழுதில் கொள்ளை இட்டு
போவேன் என்று ..
மௌனமாய் சிரிக்கும் உன் இதழோடு...
என் ஆயுள் என்றுமே சமர்பனமாய் ஆகுமடி..

எழுதியவர் : ஜுபைடா (28-Jul-13, 9:15 am)
சேர்த்தது : காயத்ரி
பார்வை : 69

மேலே