Ulaga Azhagi

உலக அழகி

யோசித்தால் கவிதை
நேசித்தால் காதல். . .
உழைத்தால் உயர்வு
பணிந்தால் அடிமை . . .
விழுந்தால் அடி
நிமிர்ந்தால் துணிவு . . . .
தொழுதால் தெய்வம்
அழுதால் குழந்தை . . . .
அணைத்தால் தாய்
நினைத்தால் நீ. . .

சுட்டால் சூரியன்
குளிர்ந்தால் நிலவு . . .
விடிந்தால் பொழுது
பழுத்தால் கனி . . .
பாய்ந்தால் புலி
எதிர்த்தால் பகை . . .
முறிந்தால் உறவு
பார் உலகு
ரதி அழகு
இணைந்தால் நீ !!!!

எழுதியவர் : Prabha (21-Dec-10, 1:22 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 417

மேலே